05.09.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் காலை 11:30 மணிக்கு கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் பணி வெறும் தொழிலாக பார்க்காமல், சேவையாக பணியாற்றியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்றும். நாகரிகமான நடத்தையும், நல்ல பழக்க வழக்கங்களையும், பண்பான மக்களை உருவாக்குவதே கல்வி நோக்கம் என்று இந்நாளின் நோக்கத்தை கூறி விழாவினை தொடங்கி வைத்தார் வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமிகு பொருட்செல்வி. “ஆசிரியர் மாணவர் உறவு” என்ற தலைப்பில் கருத்துக்கள் வாயிலாகும், கவிதை, நடனம், பாடல், நாடகம் வழியாகவும் ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றியினை தெரிவித்தார்கள் மாணவ, மாணவிகள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தனர். இனிப்பு வழங்கி விழா இனிதே நிறைவடைந்தது.