21.09.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் தேனி வட்டார அலுவலகத்தில் காலை 11:30 மணிக்கு உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது. திருமிகு.ரோசரி விழிப்புணர்வு பாடல் பாட நிகழ்வு தொடங்கியது. தேனி வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமிகு.எஸ்தர் ராணி வரவேற்புரை வழங்கினார். தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.எலியாஸ் ராஜா சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி எங்கு உள்ளதோ அங்கே தான் உலக அமைதி இருக்கிறது என்று விழாவின் நோக்கத்தை தொடக்க உரையாக வழங்கினார். எழுத்தாளர் திருமிகு விசாகன் தற்போது உள்ள அரசியலையும் எதிர்வரும் அரசியலையும் மக்களுக்கு விளக்கமளித்தார். சமுதாய செயல்பாட்டாளர் திருமிகு வடிவேல் உலக அமைதிக்கு முக்கிய காரணம் பெண்களின் செயல்பாடுகள் என வாழ்த்துரை வழங்கினார். அருட்சகோதரர் ஜோமிக்ஸ் மனது, குடும்பம், நாடு மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது இதில் சீர்குலைவு ஏற்படும் போது அமைதி குறைகிறது என்று கருத்துரை வழங்கினார். சமூக செயல்பாட்டாளர் திருமிகு முகமது ஷபி சமாதானத்தின் தூதர்கள் அதிகம் உருவாகும் போது அமைதி பாதுகாக்கப்படுகிறது என்று கருத்துரை வழங்கினார். திருமிகு.ரோசரி அனைவருக்கும் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது. தேநீர் வடை அனைவருக்கும் வழங்கப்பட்டது.