16.06.2023 அன்று காலை 10.00 மணிக்கு மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் சார்பாகத்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள மானோஸ் இல்லத்தில் செயலர் தந்தை
தலைமையில் துணைச் செயலர்கள் முன்னிலையில் அகில உலக சுற்றுச்சூழல் நாளை
முன்னிட்டு மரம் நடுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், தேனி
வட்டாரப் பணியாளர்கள் மற்றும் மகளிர் குழுத்தலைவிகள் பங்கேற்றனர். திருமிகு.எலியாஸ் ராஜா
வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார். செயலர் தந்தை கபிரியேல் மரம் நடுவிழாவின்
நோக்கம் குறித்து உரையாற்றினார். தேனி மாவட்ட ஆட்சியரகத்தின் பொது மேலாளர் திருமிகு.
ஜஸ்டின், மக்கள் மருத்துவர் தாஸ், தேனி வனவிரிவாக்க அலுவலகத்தின் வனச்சரக அலுவலர்
திருமிகு.சாந்தகுமார், திருமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமிகு.கனிராஜா, மண்டல
அலுவலர் திருமிகு.விஜயலட்சுமி, சுப்புலாபுரம் அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு.மகேஷ்,
ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் திருமிகு.ஆசீர்வாதம், வனவர் திருமிகு.பாண்டியராஜன்
ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். திருமிகு.எஸ்தர் ராணி நன்றியுரை வழங்கினார்.