26.07.2023 அன்று காலை 11:30 மணிக்கு மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் பாளைய வட்டார
அலுவலகத்தில் தையல் பயிற்சி மூன்றாம் கட்ட சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் நான்காம் கட்ட
தொடக்க விழா நடைபெற்றது. தையல் பயிற்சி மாணவி திருமதி.பிரியதர்ஷினி அனைவரையும்
வரவேற்றார். பணியாளர் திருமிகு.ஈஸ்வரி விழிப்புணர்வு பாடல் பாடினார். திருமதி.தங்க சித்ரா மற்றும்
திருமதி.சோபியா பயிற்சி கற்றுக்கொண்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்
பேராசிரியர் முனைவர் திருமிகு.வர்க்கீஸ் ஜெயராஜ் மதுரையில் சுயஉதவிக் குழுக்கள் உருவாகிய விதம்
பற்றியும் வரலாறு பற்றியும் விளக்கம் தந்தார், தையல் கலையில் சிறந்தவர்களாக முன்னேற்றம் அடைய
தையல் பயின்றோருக்கு ஆலோசனை வழங்கினார். உதவி செயலர் அருட்பணி ஸ்டாலின் தனது
உரையில் வாய்ப்பு கிடைக்கும்போதே அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
என்ற பிடல் காஸ்ட்ரோ வார்த்தைகளை எடுத்துக் கூறினார். பேராசிரியர் “உத்தமபாளையம் வரலாறு”
என்ற புத்தகத்தை வெளியிட்டார். தையல் பயிற்சி கற்றுக் கொண்டதோடு நிறுத்தி விடாமல்,
கூட்டமைப்பாக இணைந்து சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கவும், அரசு வழியாக இலவச தையல்
மெஷின் பெறவும் ஆலோசனை வழங்கப்பட்டது. தையல் பயிற்சி மாணவி திருமதி.சரண்யா நன்றி கூற
விழா இனிதே நிறைவடைந்தது.