MMSSS Celebrated International women’s day on 5th March, 2022 Saturday at 03.00pm with all fanfare at its Central office. The Program began with a mass rally with social awareness placards and slogans.
Rev. Fr. Alexis Diamond Raj Hall was compact with enthusiastic participants and the meeting started with ‘Thamizh thaai vaazthu’. Rev Fr. G. Gabriel, the Secretary welcomed everyone and in his address he briefed about the commitment of MMSSS towards the upliftment and empowerment of women.
Awareness songs were sung by two groups Ms. Sasikala & Ms. Thavamani of Kodaikanal region and Members of Paul Alphonse Kolping federation. The participants were enthralled by the magnificent message.
Ms. Eswari from Uthamapalayam enlightened the audience with a story in which she dramatized the pathetic situation of women folk.
Ms. Kavitha, Advocate in Madras High court, Madurai Bench spoke on the International women’s day vision and mission. She emphasized the need of women for their self realization and revolution to attain an equal society.
Ms. S. K. Ponnuthai, State Secretary of All India Democratic Women Association, in her key note address, explained how women are trapped in this male chauvinistic society and she was enumerating the bias that should be broken. Saplings were gifted to all participants as memento.
A Cluster of Balloons in which various types of bias were pasted was displayed and the children burst the balloons as a mark of ‘Break the Bias’, the core Theme of this International women’s day 2022.
All the participants took the pledge for the International Women’s Day.
The function ended with National Anthem.
PS: Subsequently, Women’s day (March 8) was well organized and celebrated in all the regions, the reports of which will follow shortly.
மதுரை பலநோக்கு சமூக சேவா சங்கம் – மதுரை 16
அகில உலக மகளிர் தினம் 2022 (மார்ச் 8)
மதுரை பலநோக்கு சமூக சேவா சங்கம் அகில உலக பெண்கள் தினத்தை பெருமையுடன் சிறப்பாக மார்ச் -5 ம் தேதி தனது மைய அலுவலகத்தில் கொண்டாடியது.
விழாவிற்கு முன்பாக, நமது சங்கத்துடன் செயல்படும் பல்வேறு கூட்டமைப்புகளைச் சார்ந்த மகளிர் தோழர்கள் சமூக விழிப்புணர்வு பேரணியை கம்பீரமாக நடத்திக்காட்டினார்கள்.
விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் முழக்கங்களுடன் அருட்தந்தை அலெக்ஸிஸ் டைமைண்ட் ராஜ் அரங்கத்தில் நிரம்பி வழிந்த பங்கேற்பாளர்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடப்பட்டு விழா தொடங்கியது. அருட்பணி. G. கபிரியேல் செயலர் சங்கத்தின் சார்பில் அனைவரையும் அன்புடன் வரவேற்றார். வரவேற்புரையில் மதுரை பலநோக்கு சமூக சேவா சங்கத்தின் அர்ப்பணிப்பு பற்றியும், ஒடுக்கப்பட்டோருக்கான அதிலும் உரிமை மறுக்கப்பட்ட பெண்களுக்காக சங்கம் முன்னெடுத்துச் செல்லும் முன்னேற்றத்திட்டங்களையும், செயல்பாடுகளையும் விளக்கிக் கூறினார்.
கொடைக்கானல் பணிக்குழுவைச் சேர்ந்த திருமிகு. சசிகலா மற்றும் திருமிகு. தவமணி ஆகியோரும் பவுல் அல்போன்ஸ் கோல்பிங் கூட்டமைப்பு பணியாளர்களும் விழிப்புணர்வுச் செய்திகளை தங்கள் அருமையான பாடல்கள் மூலம் அனைவருக்கும் பகிர்ந்தனர்.
மதுரை பலநோக்கு சமூக சேவா சங்கம் – மதுரை 16
திருமிகு. கவிதா, வழக்கறிஞர், சென்னை உயர்நீதி மன்றம், மதுரைக்கிளை. தனது சிறப்புரையில் பெண்கள் தினம் : தொலைநோக்குப் பார்வையும் செயல்பாடுகளும் என்ற தலைப்பில் பெண்கள் தங்கள் உரிமைகளை உணர்ந்து விழித்தெழ வேண்டிய அவசியத்தை அருமையாக வலியுறுத்தினார்.
திருமிகு. S. K. பொன்னுத்தாய், மாநிலச் செயலாளர், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தனது சிறப்புறையில், ஆணாதிக்க சமூகத்தின் அவலங்களையும், முன்சார்பு மற்றும் ஒரு நிலை சார்பு எண்ணங்களின் முரண்களையும் தெளிவாக விளக்கி பெண்களின் போராட்ட வலிமையை தீட்டிச் சென்றார்.
முன்சார்புகள் பலவற்றை புரியும்படி எழுதப்பட்ட பலூன்களின் தொகுப்பை முன்னிருத்தி ’முன் சார்பை முறியடிப்போம்” எனும் கருத்தை வலியுறுத்தும் அடையாளமாக அந்தப் பலூன்கள் ஒவ்வொன்றாக உடைக்கப்பட்டன. நினைவுப்பரிசாக மரக்கன்றுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அகில உலக மகளிர் தினத்துக்கான உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது. நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவேறியது.
பின்குறிப்பு :- தொடர்ந்து மகளிர் தினம் அனைத்து வட்டாரங்களிடம் மார்ச் மாதத்தின் வெவ்வேறு தினங்களில் வட்டார வசதிக்கேற்ப சிறப்பாக கொண்டாடப்பட்டது: அதன் அறிக்கைகள் விரைவில்…